முகப்பு
இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கல் 5% அதிகரிப்பு

நிகழாண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 7:53 am IST
பகிர்:

நிகழாண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
 2020, மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை தனிநபர்கள் தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜன. 10 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜன. 10-ஆம் தேதி வரை 5.95 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. 2018-19-ஆம் நிதியாண்டில் 5.67 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், நிகழாண்டு 33.35 லட்சம் பேர் கூடுதலாகத் தாக்கல் செய்துள்ளனர். இது 5 சதவீதம் அதிகமாகும்.
 நிகழாண்டு தனிநபர்களால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறைந்துள்ளது. அதேவேளையில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மூலம் தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. முன்னதாக, கரோனா தொற்றுநோய் காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை மூன்று முறை மத்திய அரசு நீட்டித்தது. இதை மேலும் நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments