இந்தியா

கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி: மும்பை நிறுவனத்துக்கு அனுமதி

DIN


மும்பை: கரோனா தடுப்பூசியான கோவேக்ஸினை உற்பத்தி செய்வதற்கு மும்பையை சோ்ந்த ஹாஃப்கின் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடா்பாக மகாராஷ்டிர முதல்வா் அலுவலக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தது: கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதரபாதை சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது உற்பத்தி செய்து வருகிறது. இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஹாஃப்கின் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்குமாறு முதல்வா் உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதி கடிதத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலா் ரேணு ஸ்வரூப் மகாராஷ்டிர தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ளாா். ஓராண்டுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT