இந்தியா

3 மாதங்களில் 80% பேருக்கு டெல்டா வகை கரோனா

DIN


தில்லியில் கடந்த 3 மாதங்களில் 80 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை இந்த தகவலை திங்கள் கிழமை தெரிவித்துள்ளது.

அந்தக் கூட்டத்தில் மேலும் கூறப்பட்டதாவது, கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 83.3 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மே மாதத்தில் 81.7 சதவிகிதத்தினருக்கும், ஜூன் மாதத்தில் 88.6 சதவிகிதத்தினருக்கும் டெல்டா வகை கரோனா உறுதி செய்யப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் 53.9 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை கரோனா கண்டறியப்பட்டது.

இந்த தரவுகளின் மூலம் 5,752 பரிசோதனை மாதிரிகளில் 1,689 பேருக்கு டெல்டா வகை கரோனா கண்டறியப்படுகிறது. இதேபோன்று 947 பேருக்கு ஆல்பா வகை கரோனா கண்டறியப்படுகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக டெல்டா வகை கரோனா கண்டறியப்பட்டது. இதுவரை 95 நாடுகளில் டெல்டா வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனி காவலர் பாதுகாப்புக்காக அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் கைது

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT