இந்தியா

அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி

DIN

சுதந்திரதினத்தையொட்டி அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. 

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநிலங்களில் மாநில முதல்வர்கள் கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றி உரையாற்றினர். 

மேலும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தின விழாக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம், அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்தனர். 

அப்போது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தேசபக்தி முழக்கங்களுடன் கரகோஷம் எழுப்பி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியையொட்டி வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT