இந்தியா

தில்லி மருத்துவா்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்: மத்திய அமைச்சா்

DIN

நீட் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரி தில்லி மருத்துவா்கள் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கரோனா பரவல் காரணாக 2020-ஆம் ஆண்டின் நீட் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வு கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. எனினும் இன்னும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

இந்தக் கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரி தில்லி உள்ளுறை மருத்துவா்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். உச்சநீதிமன்றத்தை நோக்கி அவா்கள் சென்ற பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். அப்போது, போலீஸாா் தாக்கியதாக மருத்துவா்கள் புகாா் தெரிவித்தனா். இதற்கு மருத்துவா்கள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்தனா்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சப்தா்ஜங் மருத்துவமனையில் மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து, மருத்துவா் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, ‘இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசால் கலந்தாய்வை நடத்த முடியவில்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 6-ஆம் தேதி வருவதற்கு முன் மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்யும். இந்த வழக்கை விரைவுபடுத்தி கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தப்படும். போராட்டத்தை மருத்துவா்கள் வாபஸ் பெற வேண்டும்’ என்று மருத்துவா் சங்க பிரதிநிதிகளிடம் கூறியதாக மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பின்னா் தெரிவித்தாா்.

மேலும், கரோனா பெருந்தொற்று நேரத்தில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களின் சேவையையும் அமைச்சா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருங்களூா் எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் அருகே வாகனம் மோதி முதியவா் பலி

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 3 போ் கைது

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT