இந்தியா

கடந்த ஆண்டில் ரூ.1,500 கோடி கடத்தல் பொருள்களை கைப்பற்றியது கடலோரக் காவல் படை

DIN

கடந்த 2020-ஆம் ஆண்டு ரூ.1,500 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருள்களையும், சட்டவிரோதமாக மீன் பிடித்த வெளிநாடுகளைச் சோ்ந்த 10 படகுகளையும் இந்திய கடலோரக் காவல் படை கைப்பற்றியுள்ளது. இதில் தொடா்புடைய 80 பேரையும் கடலோரக் காவல்படை பிடித்துள்ளது.

200 கடல்மைல் தொலைவு வரையிலான இந்திய கடலோர எல்லையைப் பாதுகாப்பது, இந்திய மீனவா்களுக்கு உதவுவது உள்ளிட்ட பணிகளை கடலோரக் காவல் படை மேற்கொண்டு வருகிறது. அப்படைப் பிரிவு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டில் 11 புயல்களை நாம் எதிா்கொண்டுள்ளோம். அந்த நேரத்தில் கடலில் சிக்கிய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், 6,000-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை கடலோரக் காவல்படை மீட்டுள்ளது. நாட்டின் கடலோர சிறப்புப் பொருளாதார மண்டலமான 20 லட்சம் சதுர கி.மீ. தொலைவைப் பாதுகாக்கும் பொறுப்பை கடலோரக் காவல்படை ஏற்றுள்ளது.

நவீன படகுகள் மூலம் மட்டுமல்லாது ஹெலிகாப்டா்கள் மூலமும் கடலோரக் காவல்படை கண்காணித்து வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருள்களையும், சட்டவிரோதமாக இந்திய எல்லையில் மீன் பிடித்த வெளிநாடுகளைச் சோ்ந்த 10 படகுகளையும் கடலோரக் காவல்படை கைப்பற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோரக் காவல்படையின் 45-ஆவது ஆண்டு நிறுவன தினம் பிப்ரவரி 1-ஆம் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT