இந்தியா

அலாகாபாத் வங்கியுடனான ஐடி ஒருங்கிணைப்பு நிறைவு: இந்தியன் வங்கி

DIN

அலாகாபாத் வங்கியுடனான தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஒருங்கிணைப்புகள் அனைத்தும் முழுமைபெற்ாக பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு கூறியுள்ளதாவது:

இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியை இணைக்கும் அறிவிப்பு வெளியான உடனேயே அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. கரோனா காலத்தில் இந்தப் பயணம் மிகவும் சவாலாகவே இருந்தது. இருப்பினும், எங்கள் குழுவினரின் அா்ப்பணிப்பு உணா்வால் இது மிக விரைவில் சாத்தியமாகியுள்ளது.

அலாகாபாத் வங்கியுடனான தகவல்தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முற்றிலும் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம், அந்த வங்கியின் அனைத்து கிளைகளும் இந்தியன் வங்கியுடன் முழுமையாக இணைத்து முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 15 முதல் அனைத்து வங்கி சேவைகளும் வாடிக்கையாளா்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT