இந்தியா

வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை: ப. சிதம்பரம்

DIN


புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.

இதுபற்றி தொடர்ச்சியான சுட்டுரைப் பதிவுகளில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"உண்மை என்னவென்றால் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. குறிப்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. வேளாண் சட்டங்கள் அவசர சட்டங்களாக நிறைவேற்றுவதற்கு முன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் அவை பொய் என்பது ஆர்டிஐ-இன் பதில்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எதிர்பார்த்தபடியே விவசாயிகள் மற்றும் அரசுக்கிடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. சர்ச்சைக்குரிய சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புக்கொள்ளாததால், அரசிடம்தான் தவறு இருக்கிறது."   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT