இந்தியா

தில்லியில் புதிதாக 246 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 246 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 246 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,32,429 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 385 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 8 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,19,139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 10,746 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 2,544 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 10 நாள்கள் கிடைத்த தரவுகளின்படி இறப்பு விகிதம் 2.84 சதவிகிதமாக உள்ளது. பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.36 சதவிகிதம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT