இந்தியா

சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா சிகிச்சைக் கட்டணம் ரூ.2.5 லட்சம்

DIN


புது தில்லி; தில்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கடந்த ஆண்டு கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான கட்டணமாக ரூ.2.5 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

56 வயதாகும் சத்யேந்தர் ஜெயின், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், கடந்த ஜூன் 19 முதல் ஜூன் 26 வரையில் சத்யேந்தர் ஜெயின் தனியார் மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைக்காக செலவிடப்பட்ட ரூ.2,54,898-க்கான மருத்துவக் கட்டண ரசீதை தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக தில்லி அரசின் நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT