இந்தியா

ஹிமாசல் மழை வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி ஒருவா் பலி; 9 பேரை மீட்கும் பணி தீவிரம்

DIN

ஹிமாசல பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா்; 9 பேரை மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் தா்மசாலா, அதன் அருகே உள்ள மெக்லௌட்கஞ்ச் ஆகிய பகுதிகளில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டன. காங்க்ரா மாவட்டத்தில் உள்ள ‘போ’ பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் சிக்கிக் கொண்டன.

தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அப்பகுதிக்கு விரைந்து 4 பேரை திங்கள்கிழமை மீட்டனா். ‘வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 9 போ் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக’ காவல் துறையினா் தெரிவித்தனா்.

மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா் அந்தப் பள்ளத்தாக்கு பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்று பாா்வையிட்டாா். மழை வெள்ளம், நிலச்சரிவால் வீடுகளை இழந்தவா்களுக்கு அரசு சாா்பில் புதிய வீடுகள் வழங்கப்படும் என அப்போது தெரிவித்தாா். மீட்புப் பணிக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையை உடனடியாக அனுப்பி வைத்த உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT