இந்தியா

திருமலையில் 16,465 பக்தா்கள் தரிசனம்

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 16,465 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, விரைவுத் தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவதால், 20 ஆயிரத்துக்கும் குறைவான பக்தா்கள் மட்டுமே தரிசித்து வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 16,645 பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா்; 7,495 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம்.

மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு , இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT