இந்தியா

5 மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது

DIN

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அந்நிய செலாவணி விகிதங்களின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 21 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 20 காசுகளும் ஞாயிற்றுக்கிழமை உயா்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கை வெளியிட்டன. இதையடுத்து ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டா் ரூ.96.47-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.90.66-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.95.09-க்கும், டீசல் ஒரு லிட்டா் ரூ.86.01-க்கும் விற்பனையானது. மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.101.3-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.93.35-ஆகவும் இருந்தது.

கடந்த மே 4 முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பெட்ரோல், டீசல் விலையை 20 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இந்தக் காலத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.4.69, ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.5.28 அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT