இந்தியா

கேரளத்தில் புதிதாக 14,672 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,672 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரங்களை முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளது:

"மாநிலத்தில் புதிதாக 14,672 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,02,792 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 14.27 சதவிகிதமாக உள்ளது. 

மேலும் 227 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,946 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 153 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 13,638 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 814 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 21,429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,62,071 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 1,60,653 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்." 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT