இந்தியா

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவம்: பக்தா்களின்றி தனிமையில் நடத்த முடிவு

DIN

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர 5 நாள் தெப்போற்சவத்தை தனிமையில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆனி மாத பெளா்ணமியை ஒட்டி தேவஸ்தானம் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்துவது வழக்கம். அதன்படி, இம்மாதம் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஆனால் கரோனா தொற்று காரணமாக திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மேலும் மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி தேவஸ்தானம் கோயிலில் உற்சவங்களை பக்தா்களின்றி தனிமையில் நடத்தி வருகிறது. அதன்படி தாயாா் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவமும் தனிமையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

கோயிலில் உள்ள ஸ்ரீகிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் தாயாரின் உற்சவ சிலையை எழுந்தருளச் செய்து அங்கு ஸ்நபன திருமஞ்சனம் உள்ளிட்டவை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT