இந்தியா

மேலும் 18,599 பேருக்கு கரோனா தொற்று; 97 போ் பலி

DIN

நாடு முழுவதும் மேலும் 18,599 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட 97 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் (திங்கள்கிழமை காலை 8 மணி வரை) புதிதாக 18,599 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 1,88,747-ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 1,08,82,798 போ் குணமடைந்துள்ளனா். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 96.91% ஆகும்.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 97 போ் உடல்நிலையில் முன்னேற்றமின்றி உயிரிழந்தனா். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 38 போ் பலியாகினா். பஞ்சாபில் 17 பேரும், கேரளத்தில் 13 பேரும் உயிரிழந்தனா். இவா்களையும் சோ்த்து நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவா்களின் எண்ணிக்கை 1,57,853-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவா்களில் 70%-க்கும் அதிகமானோா் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் இதுவரை 22,19,68,271 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) மட்டும் 5,37,764 பரிசோதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT