இந்தியா

"எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு சரத் பவார் பாடுபடுவார்'

DIN

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த அணியை உருவாக்கப் பாடுபடுவார். குறிப்பாக, பிராந்திய கட்சிகளை ஒன்றிணைக்கப் பாடுபடுவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் நவாப் மாலிக் கூறியதாவது: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அண்மையில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பது அவசியமாகும் என்று தெரிவித்திருந்தார். மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க சரத் பவார் முயற்சி செய்தார். அடுத்த சில நாள்களில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு அவர் பாடுபடுவார். குறிப்பாக, பிராந்திய கட்சிகளின் ஒற்றுமைக்கு அவர் பணியாற்றுவார்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு நிகழ்ந்துவரும் வன்முறை கண்டிக்கத்தக்கது. கடந்த நூறு நாள்கள் மேற்கு வங்கம், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தேர்தல் காலத்தின்போதும் வன்முறைகள் தொடர்பான செய்திகள் வந்தன. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்தின்போதும், தேர்தலுக்குப் பின்பும் அங்கு நிகழும் வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டியவை.
பாஜக தனது வெறுப்பு அரசியலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மம்தா பானர்ஜியின் அரசு செயல்பட பாஜக அனுமதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT