இந்தியா

உத்தரகண்ட் வருவோருக்கு கரோனா பரிசோதனைச் சான்று கட்டாயம்

ANI

உத்தரகண்ட் மாநிலத்திற்குள் நுழைவோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைச் சான்று கட்டாயம் என்று அம்மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

டெஹ்ராடூன், ஹரித்வார், உதம்சிங்நகர் மற்றும் நைனிடால் ஆகிய இடங்களிலிருந்து உத்தரகண்ட் மாநிலத்திற்குள் வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைச் சான்று மற்றும் விரைவான ஆன்டிஜென் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 

உத்தரகண்ட்டில் மே 18 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் கடந்த ​​72 மணி நேரத்திற்குள் எடுத்த ஆர்டிபிசிஆர் எதிர்மறை சான்று வைத்திருக்க வேண்டும். மேலும் ஸ்மார்ட் சிட்டி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்றார். 

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 5,890 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளதாக, மேலும் 180 பேர் பலியாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT