இந்தியா

ரமலான்: இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இனிப்பு பரிமாற்றம்

DIN

ஸ்ரீநகா்: இஸ்லாமியா்களின் பண்டிகையான ரமலானை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளான குப்வாரா மற்றும் உரியில் இரு நாட்டு ராணுவத்தினரும் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனா்.

வழக்கமாக தீபாவளி, ஹோலி, ரமலான் உள்ளிட்ட பண்டிகைகளின்போதும் சுதந்திர தினம் உள்ளிட்ட தேசிய தினங்களின்போதும் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கமாகும்.

இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ரமலான் பண்டிகையை முன்னிட்டு குப்வாரா மற்றும் உரி எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் வாழ்த்துகளும், இனிப்பும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. உரிய கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT