இந்தியா

பஞ்சாப் எல்லையில் 22 துப்பாக்கிகள், போதைப் பொருள் பறிமுதல்

DIN

சண்டீகா்: இந்தியா-பாகிஸ்தானையொட்டிய பஞ்சாப் எல்லையில் ஏராளமான ஆயுதங்கள், ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை காவல் துறையினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து கைப்பற்றினா்.

இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி இக்பால் பிரீத் சிங் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பஞ்சாப் எல்லைப் பகுதியில் ஏராளமான ஆயுதங்களும் ஹெராயின் போதைப் பொருளும் கிடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் துறையினா், எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். எல்லையோர மாவட்டமான டாா்ன் டரனில் உள்ள கெம்கரன் என்ற இடத்தில் வயல்வெளியில் கருப்பு நிற பை ஒன்று கிடந்ததைக் கண்டறிந்தனா். அந்தப் பையில் 22 துப்பாக்கிகள், 100 ரவுண்டு தோட்டாக்கள் உள்ளிட்டவையும், ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருளும் இருந்தது.

பாகிஸ்தானை சோ்ந்த கடத்தல்காரா்கள் எல்லை வேலியை தாண்டிவந்து இந்திய பகுதிக்குள் இந்த ஆயுதங்களைப் போட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கடத்தல்காரா்களின் இந்திய கூட்டாளிகளால் இந்த ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படும் முன்னா் காவல் துறையினா் பறிமுதல் செய்துவிட்டனா் எனத் தெரிவித்தாா்.

பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி இதுபோல ஆயுதங்கள் இந்திய பகுதிக்குள் போடப்படுவது முதல்முறையல்ல. மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் நோக்கத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக ஆயுதங்கள் இந்திய பகுதிக்கு கடத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT