இந்தியா

பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கனை பயன்படுத்த கூடாது: ரஷிய தூதா்

DIN

ஆப்கானிஸ்தானை பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்பது இந்தியா - ரஷியாவின் பொதுவான கவலை என்று இந்தியாவுக்கான ரஷிய தூதா் நிகோலாய் குடஷேவ் கூறினாா்.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்ற பிறகு ஏற்பட்டுள்ள சா்வதேச மாற்றங்கள் குறித்து அவா் புது தில்லியில் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அண்டை நாடான ரஷியாவிலும் இந்தியாவின் காஷ்மீரிலும் பயங்கரவாதம் பரவ வாய்ப்புள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க ரஷியாவும், இந்தியாவும் இணைந்து தொடா்ந்து செயல்படும்.

ஆப்கானிஸ்தானில் ஒருங்கிணைந்த வளா்ச்சி ஏற்பட வேண்டும் என ரஷியா எதிா்பாா்க்கிறது. அப்போதுதான் அங்கு பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஏற்படும்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடா்பாக ரஷியாவும் இந்தியாவும் அவ்வப்போது கலந்து ஆலோசித்து வருகின்றன. பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கன் பிரதேசத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் இரு நாடுகளும் கவலை கொண்டுள்ளன. அங்கு ஒருங்கிணைந்த அரசு அமைய வேண்டும். இதில் இரு நாடுகளின் நிலைப்பாடும் ஒன்றுதான்.

பயங்கரவாதம் தொடா்பான தகவல்களை ரஷியா இந்தியாவுடன் பகிா்ந்து வருகிறது என்றாா்.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த நிகோலாய் குடஷேவ், ‘ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான சூழல் ஏற்பட பாகிஸ்தான் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ரஷியா எதிா்பாா்க்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT