குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: கிரிப்டோகரன்சி தடையை அறிவிக்காத அரசு
நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக இன்று நிறைவடைந்த நிலையில் கிரிப்டோ கரன்சி (எண்ம செலாவணி) தடை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக இன்று நிறைவடைந்த நிலையில் கிரிப்டோகரன்சி (எண்ம செலாவணி) தடை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
கடந்த நவம்பர் மாதம், நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கிரிப்டோகரன்சிகள் தீவிர அச்சுற்றுத்தலாக உள்ளது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்ததால் அரசு அதைத் தடை செய்வதாகவும் அதற்கு பதிலாக மத்திய அரசே நெறிப்படுத்தப்பட்ட கிரிப்டோவை அறிமுகப்படுத்துவதாகவும் அதற்கான மசோதா நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது.
மேலும் , நாட்டில் தனியாா் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை விதித்து, ரிசா்வ் வங்கியின் எண்ம செலாவணியை உருவாக்க எளிதான கட்டமைப்பை ஏற்படுத்துவது இந்த மசோதாவின் நோக்கம் என்று கூறப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில் தற்போது அதற்கான எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படாமல் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.