சென்னையில் இன்று 3 டிகிரி வரை வெப்பநிலை குறையக்கூடும்: வானிலை தகவல்!
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும் என்பதைப் பற்றி..
சென்னையில் இன்று 3 டிகிரி வரை வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில், சென்னைக்குக் கிழக்கு-வடகிழக்கே சுமார் 80–100 கி.மீ. தொலைவில் பரவலான மேகக் கூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேகமூட்டமும் காற்றின் ஈரப்பதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சூரிய ஒளி குறைவாகக் கிடைப்பதால், பகல் வெப்பநிலை வழக்கத்தை விட 1–3 செல்சியஸ் வரை குறைவாக இருக்கலாம். மேலும், கடற்காற்று சற்று வலுப்பெற்று ஈரப்பதமான காற்றைக் கரையோர பகுதிகளுக்குக் கொண்டு வரும்.
Advertisement
Advertisement
பரவலான கனமழைக்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும், சென்னை உள்பட வட கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மொத்தத்தில், வானிலை மேகமூட்டத்துடன், அதிக ஈரப்பதத்துடன் மற்றும் சற்று குளிர்ச்சியாக இருக்கும். பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை.
சென்னையைச் சூழ்ந்துள்ள கருமேகங்கள் வங்கக்கடலில், சென்னைக்கு அருகே 100 கி.மீ தொலைவில் அடர்ந்த மேகக் கூட்டம், வானிலை மேகமூட்டத்துடன் அதிக ஈரப்பதத்துடன் காணப்படும். பலத்த கடல் காற்று வீசுவதால் குளிர்ந்த சூழல் நிலவும். சூரிய வெளிச்சம் குறைவதால் பகல் வெப்பநிலை 3 டிகிரி வரை குறையலாம்.
மேலும், சென்னையைச் சூழ்ந்துள்ள கருமேகங்களால் மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The Meteorological Department has stated that the temperature in Chennai will drop by up to 3 degrees today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.