முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

கால்பந்து உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்குத் தேர்வான அமெரிக்கா குறித்து...

Updated On : 20 ஜூன் 2026, 12:24 pm IST
கோல் அடித்த மகிழ்ச்சியில் அமெரிக்க வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையில் அமெரிக்க அணி ஆஸ்திரேலியாவை 2-0 என வீழ்த்தி அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 32க்கு முன்னேறியுள்ளது.

நடப்பு உலகக் கோப்பையில் மெக்சிகோ அணி முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வானது. இரண்டாவது அணியாக அமெரிக்கா இணைந்துள்ளது.

சியாட்டல் கால்பந்து திடலில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியில் 11ஆவது நிமிஷத்தில் ஆஸ்திரேலிய டிஃபெண்டர் கேமரூன் பர்கெஸ் ஓன் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார்.

Advertisement

Advertisement

பின்னர், 43ஆவது நிமிஷத்தில் அமெரிக்காவின் அலெக்ஸ் ஃப்ரீமேன் கோல் அடித்தார். அது முதலில் ஆஃப்சைடாகக் கொடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

இந்தப் போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் புலிசிக் இல்லாமலேயே அந்த அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அடுத்த போட்டியில் அமெரிக்கா துருக்கியுடன் விளையாடவிருக்கிறது.

summary

Without injured Pulisic, US beat Australia 2-0 to advance to WC knockouts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments