FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிகாரில் பெட்ரோல் விலையைத் தொடர்ந்து சிஎன்ஜி, பிஎன்ஜி கேஸ் விலையும் உயர்வு

பிகாரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சிஎன்ஜி, பிஎன்ஜி, கேஸ் விலையையும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. 

1 பிப்ரவரி 2024, 2:25 pm IST
பகிர்:

பிகாரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சிஎன்ஜி, பிஎன்ஜி, கேஸ் விலையையும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. 

வாகனங்களுக்கு நிரப்பப்படும் சிஎன்ஜி, பிஎன்ஜி, கேஸ் பாட்னாவில் இந்திய எரிவாயு ஆணையத்தால் வழங்கப்படுகின்றன. அந்நிறுவனம் சிஎன்ஜி கேஸ் விலையை ரூ.3-ம், பிஎன்ஜி கேஸ் விலையை ரூ.2-ம் உயர்த்தியுள்ளது. 

இதன்மூலம் பாட்னாவில் சிஎன்ஜியின் விலை ரூ.72.96 ஆக உள்ளது. முன்னதாக கிலோவுக்கு ரூ.69.96 ஆக இருந்தது. இதேபோல் பிஎன்ஜி ஒரு எஸ்சிஎம் -க்கு ரூ.37.87 ஆக இருந்தது. தற்போது அது ரூ.37.87 எஸ்சிஎம்-ஐ எட்டியுள்ளது. 

Advertisement

Advertisement

பாட்னாவில் பெரும்பான்மையான மக்கள் ஹேர் ஆட்டோக்களை விரும்புகிறார்கள். பொது போக்குவரத்து கட்டண உயர்வு மட்டுமின்றி தற்போது ஆட்டோ, டாக்ஸி கட்டணமும் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, பிகார் மாநிலத்தில் டீசல் வர்த்தக வாகனங்களின் இயக்கத்தை நிறுத்த பிகார் அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து நிறுவனங்கள் பாட்னாவில் சிஎன்ஜியைத் தேர்வு செய்கின்றன. தனியார் பயணிகள் மாநிலம் முழுவதும் சிஎன்ஜி நிலையங்களை கோருகின்றனர்.

பாட்னாவில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.116.23 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.06 ஆகவும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments