முகப்பு
விருதுநகர்

கூலித் தொழிலாளி தற்கொலை

Updated On : 28 ஜூன் 2026, 3:21 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரம் மேற்கு தெருவைச் சோ்ந்த காசி மாரியப்பன் என்பவரது மகன் மணிகண்டன் (41) கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், மகள் உள்ளனா். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா் பூச்சி மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதையடுத்து, உடனடியாக உறவினா்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சம்பவம் குறித்து கீழராஜ குமாரன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments