பிகாரில் அதிர்ச்சி... தினக்கூலி ஒருவருக்கு ரூ.37.5 லட்சம் செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ்!
பிகாரில் தினக்கூலி வேலை செய்யும் ஒருவருக்கு ரூ. 37.5 லட்சம் வருமான வரி "பாக்கி" செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ககாரியா: பிகாரில் தினக்கூலி வேலை செய்யும் ஒருவருக்கு ரூ. 37.5 லட்சம் வருமான வரி "பாக்கி" செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தில் உள்ள மகௌனா கிராமத்தில் வசிக்கும் கிரிஷ் யாதவ், இவர் தினமும் கூலி வேலைக்குச் சென்று ஒரு நாளைக்கு சுமார் ரூ. 500 சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு ரூ.37.5 லட்சம் வருமான வரி பாக்கி உள்ளதாகவும், அதனை செலுத்துமாறு வருமான வரித் துறையினர் அனுப்பியுள்ள நோட்டீஸை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையடுத்து கிரிஷ் யாதவ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் | 'இலவசங்கள் ஒருபோதும் இலவசம் அல்ல; வாக்காளர்களுக்கு அதன் தாக்கம் தெரிய வேண்டும்' - அசிமா கோயல்
"கிரிஷ் யாதவ் அளித்த தகவலின் அடிப்படையில் நாங்கள் வழக்குப் பதிவு செய்து போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், முதல்கட்ட விசாரணையில் இது ஒரு மோசடி வழக்காகத் தெரிகிறது" என்று அலவுலி காவல் நிலைய காவல் அதிகாரி புரேந்திர குமார் கூறினார்.
மேலும், புகார்தாரர் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸைப் பெற்றுள்ளார் என்று காவல் அதிகாரி கூறினார்.
"தில்லியில் தான் சிறிய வேலைகளைச் செய்து வந்தேன். அதைக் கொண்டு ஒரு முறை பான் கார்டைப் பெற முயற்சித்தேன் என்று கிரிஷ் யாதவ் கூறினார்.
மேலும், அந்த நோட்டீசில், கிரிஷ் ராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் அந்த அந்த மாநிலத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை" என்று கிரிஷ் யாதவ் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.