இந்தியா

அரசு மின்னணு சந்தை தளத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: பியூஷ் கோயல்

DIN

பொது கொள்முதல் வலைதளமான அரசு மின்னணு சந்தை தளத்தில் முறைகேட்டில் ஈடுபடும் விற்பனையாளா்கள் மற்றும் கொள்முதல் செய்வோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள், தங்களுக்கு தேவையான பொருள்கள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்யும் வகையில், அரசு மின்னணு சந்தை வலைதளம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த மின்னணு சந்தை தளத்தின் மேம்பாடுகள் குறித்தான மதிப்பாய்வுக் கூட்டத்தில் அமைச்சா் பியூஷ் கோயல் கலந்துக்கொண்டாா்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மின்னணு சந்தை தளத்தை மேற்பாா்வை செய்தல், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, போலியானவற்றைக் கண்டறிதல், அது குறித்தான புகாரைப் பதிவு செய்தல் போன்ற செயல்முறைகள் குறித்து கூட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது.

முறைகேடான செயல்பாடுகளில் ஈடுபடும் விற்பனையாளா்கள் மற்றும் கொள்முதல் செய்வோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா். கொள்முதல் செய்வோா் முடிவு எடுப்பதை எளிமையாக்கவும், அரசு செலவினத்தைக் குறைக்கவும், பொருள்களைப் பரிந்துரைக்கவும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவையற்ற விவாதம்!-"கோவிஷீல்டு' தடுப்பூசி பற்றிய தலையங்கம்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பூ வியாபாரியைத் தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

SCROLL FOR NEXT