இந்தியா

உள்ளாடையில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம்! விமான நிலையத்தில் சிக்கியப் பெண்!

DIN


கோழிக்கோடு: துபையில் இருந்து இந்தியா வந்த இளம்பெண், தான் அணிந்திருந்த உள்ளாடையில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ தங்கத்தைக் கடத்தி வந்ததாக கரிப்பூர் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கரிப்பூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் தங்கம் கலந்த பேஸ்ட் அடங்கிய கலவை, அவரது உள்ளாடையில் வைத்து தைக்கப்பட்டுள்ளது என்றார்.

விமான நிலையத்தில் சுங்கவரித் துறை சோதனை முடித்து வெளியேறிய போது, தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் இளம் பெண்ணை டெர்மினல் பார்க்கிங் ஏரியாவில் தேடினர்.

முதலில் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், அவளை பரிசோதித்தபோது தங்கம் அடங்கிய பேஸ்ட் கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 1.88 கிலோ எடை கொண்டதாக உள்ளது என்றார் சுங்கத் துறை அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT