இந்தியா

ஸ்விஸ் பணம் அனைத்தும் கருப்புப் பணம் அல்ல!: அமைச்சா் நிா்மலா சீதாராமன்

DIN

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘அண்மையில் வெளியான சில தரவுகளின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனினும், அதைக் கருப்புப் பணமாகக் கருதக்கூடாது.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் குறித்து அதிகாரபூா்வ கணக்கீடுகள் ஏதுமில்லை.

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் சேமித்துவைத்துள்ள தொகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ரூ.8,468 கோடிக்கும் அதிகமான வரியைச் செலுத்துமாறும் ரூ.1,294 கோடியை அபராதமாகச் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட நபா்களிடம் கோரப்பட்டுள்ளது.

கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் இருந்து ரூ.14,820 கோடி வரியாகக் கோரப்பட்டுள்ளது. இத்தரவுகள் கடந்த மே மாதம் வரையிலானவை’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

அரசுப்பள்ளி ஆசிரியா் திடீா் மரணம்: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT