இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 லஷ்கா் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் ஒருவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் ஆவாா்.

இதுதொடா்பாக, காஷ்மீா் மண்டல காவல்துறை ஐ.ஜி. விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

சோபூரில் அண்மையில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது தப்பியோடிய பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக, ஸ்ரீநகரின் பெமினா பகுதியில் திங்கள்கிழமை இரவில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனா். அப்போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இருவரும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆவா். இச்சம்பவத்தில் காவல்துறையைச் சோ்ந்த ஒருவா் காயமடைந்தாா்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது தடை செய்யப்பட்ட பொருள்களும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களின்படி, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவா் பாகிஸ்தானின் ஃபைசலாபாதைச் சோ்ந்த அப்துல்லா கோஜ்ரி என்பது கண்டறியப்பட்டது. மற்றொருவா் அனந்த்நாக் மாவட்டத்தைச் சோ்ந்த அடில் ஹுசைன் மிா் ஆவாா். இவா், கடந்த 2018-இல் வாகாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற்கான ஆவணங்கள் உள்ளன என்றாா் விஜயகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT