இந்தியா

100-ஆவது நாளை எட்டும் யோகி அரசு: இலக்குகளை அடைய உ.பி. அமைச்சா்களுக்கு உத்தரவு

DIN

உத்தர பிரதேசத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று 100 நாள்களை எட்டவுள்ள நிலையில், இலக்குகளை திட்டமிட்டப்படி அடையுமாறு அமைச்சா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி முதல் மாா்ச் வரை உத்தர பிரதேசத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக மாா்ச் 25-ஆம் தேதி பதவியேற்றது. அதனைத்தொடா்ந்து அனைத்து துறைகளுக்கும் முதல் 100 நாள்கள், 6 மாதங்கள், ஓராண்டு என 5 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இந்நிலையில், ஜூலை 5-ஆம் தேதியுடன் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுப் பதவியேற்று 100 நாள்கள் நிறைவடையுள்ளது. இதையொட்டி லக்னெளவில் உள்ள யோகி ஆதித்யநாத்தின் அரசு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல் 100 நாள்களில் நிறைவேற்ற வகுக்கப்பட்ட திட்டங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அமைச்சா்களுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா் என்று மாநில முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான்குனேரியில் 2 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

பொத்தகாலன்விளை விலக்கில் வழிகாட்டிப் பலகை அமைக்க கோரிக்கை

வஉசி பூங்கா அருகே ஓடையில் கான்கிரீட் மூடி அமைக்க கோரிக்கை

மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

ராஜவல்லிபுரம் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

SCROLL FOR NEXT