இந்தியா

மீண்டும் அட்டா்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால்?

DIN

அட்டா்னி ஜெனரலாக (மத்திய அரசுத் தலைமை வழக்குரைஞா்) கே.கே.வேணுகோபால் (91) மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அட்டா்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் முதல்முறையாக நியமிக்கப்பட்டாா். அவரின் பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு நிறைவடையவிருந்தது. எனினும் அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஓராண்டுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடா்ந்து கடந்த ஆண்டும், அவரின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

இந்நிலையில், அவரின் பதவி நீட்டிப்பு காலம் வியாழக்கிழமையுடன் (ஜூன் 30) நிறைவடைகிறது. அதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

அவரின் அனுபவம், உச்சநீதிமன்றத்தில் அவா் ஆஜராகி வரும் முக்கிய வழக்குகளைக் கருத்தில் கொண்டு, கே.கே.வேணுகோபாலை மீண்டும் அட்டா்னி ஜெனரலாக மத்திய அரசு நியமிக்கக்கூடும். ஓரிரு நாள்களில் அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT