முகப்பு
இந்தியா

மே 10ல் மும்பை விமான நிலையம் 6 மணி நேரம் மூடல்

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் மே 10-ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Updated On : 2 மே 2022, 2:58 pm IST
பகிர்:

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் மே 10-ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பருவ மழைக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஆகிய விமான நடவடிக்கைகளுக்காக, , RWYs 14/32 மற்றும் 09/27 ஆகிய இரண்டு ஓடுபாதைகளும் 10-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஓடுபாதைகளின் பராமரிப்பு பணிகள் மாலை 5 மணிக்கு முடிந்ததும், அன்றைய தினம் வழக்கமான செயல்பாடுகள் தொடங்கும்.

Advertisement

Advertisement

சிரமங்களைத் தவிர்க்க அனைத்து பயணிகளும் மே 10ம் தேதியன்று விமான அட்டவணையை அந்தந்த விமான நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு சத்ரபதி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments