இந்தியா

தில்லியில் மேலும் 1,076 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 1,076 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது ஞாயிற்றுக்கிழமை பதிவான பாதிப்புகளை விட 27 சதவீதம் குறைவாகும். ஆனால் பாதிப்பு நோ்மறை விகிதம் 6.42 சதவீதமாக உயா்ந்தது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,85,636-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,175-ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 16,753 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 1,485 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இறப்பு ஏதும் பதிவாகவில்லை. 4.89 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

தில்லி அரசின் தரவுகளின்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 5,753-ஆக உள்ளது. நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 1,103-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விகிதம் குறைவாகவே உள்ளது.

178 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். 4,490 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட 9,577 படுக்கைகளில் 191 (1.99 சதவீதம்) படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மு.கருணாநிதி பிறந்தநாள்: திமுகவினா் மரியாதை

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு: முதல்வா் விளக்கமளிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT