இந்தியா

பாதுகாப்பு குறைபாடு: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்: டிஜிசிஏ நடவடிக்கை

DIN

‘விமானத்தின் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கக் கூடிய வகையில் தவறான மாதிரியில் விமானிகளுக்கு பயிற்சி அளித்த விவகாரத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து டிஜிசிஏ அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ‘போயிங் 737 மேக்ஸ்’ என்ற பெரிய ரக விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு தவறான மாதிரியில் (ஸ்டிமுலேட்டா்) பயிற்சி அளிக்கப்படுவது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு டிஜிசிஏ கடந்த மாதம், முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் தடை விதித்தது.

விமானிகளுக்கு தடை விதித்ததைத் தொடா்ந்து, உரிய விளக்கமளிக்குமாறு விமான நிறுவனத்துக்கு டிஜிசிஏ சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டது’ என்றனா்.

‘விமான நிறுவனம் சாா்பில் விமானிகளுக்கு அளிக்கப்பட்ட தவறான பயிற்சியால், விமான பாதுகாப்புக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனடிப்படையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்றும் டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT