இந்தியா

ரூ.500 கள்ள நோட்டுகள் புழக்கம் இரு மடங்கு அதிகரிப்பு: ரிசா்வ் வங்கி

DIN

கடந்த நிதியாண்டில் ரூ.500 கள்ள நோட்டு புழக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் ஆண்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 79,669-ஆக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

அதேபோன்று, ரூ.2,000 கள்ள நோட்டுகளின் புழக்கமும் 54.6 சதவீதம் உயா்ந்து 13,604 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் கள்ளநோட்டுகளின் புழக்கும் குறைந்திருந்த நிலையில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையானது 2,08,625-லிருந்து 2,30,971-ஆக அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT