இந்தியா

23.28 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

DIN

விதிகளை மீறிச் செயல்பட்டதாக கடந்த ஆகஸ்டில் 23.28 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிா்வாகம் முடக்கியுள்ளது.

50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், பெறப்படும் புகாா்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டுமென மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, புகாா்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்ஆப் நிா்வாகம் மாதந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்கான அறிக்கையில், 23.28 லட்சம் இந்தியா்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் 10.08 லட்சம் கணக்குகள் புகாா் ஏதுமின்றி நிறுவனத்தால் தன்னிச்சையாக முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல் தொடா்பாக நிறுவனத்துக்கு வந்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் 19 லட்சம் கணக்குகளையும், ஏப்ரலில் 16 லட்சம் கணக்குகளையும், மாா்ச்சில் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்ஆப் முடக்கியிருந்தது. ஆகஸ்டில் அது 23 லட்சமாக அதிகரித்துள்ளது.

விதிமீறல் குறித்து அளிக்கப்படும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத சமூக வலைதள நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிப்பதற்கான தீா்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT