முகப்பு
இந்தியா

திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

Updated On : 24 ஜூன் 2022, 6:04 pm IST
ஜேபி நட்டா, பிரதமர் மோடி, திரௌபதி முர்மு, ராஜ்நாத் சிங் மற்றும் அமித் ஷா
பகிர்:

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு(64) அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதையும் பார்க்க.. வேட்புமனுத் தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு - புகைப்படங்கள்

Advertisement

Advertisement

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக ஆதரவுக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று வியாழக்கிழமை தில்லி வந்தவர் பாஜகவின் முக்கியத் தலைவர்களையும் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்தார். 

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முன் திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் தரப்பில்  குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹ வருகிற ஜுன் 27 அன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments