முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 181.89 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 181.89 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 23 மார்ச் 2022, 11:33 am IST
பகிர்:

நாட்டில் இதுவரை 181.89 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 12 முதல் 14 வயதுள்ள சிறார்களுக்கு இதுவரை 52 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 52,10,775 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம்1,81,89,15,234 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வயதுவாரி விவரங்கள்

நாட்டில் தற்போது 23,087 பேர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,542 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,73,057 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,778 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.  மேலும் இந்தியாவில் ஒரேநாளில் 6,77,218 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மொத்தம் இதுவரை 78,42,90,846 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments