சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம்: கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு
பணம் பெற்றுக் கொண்டு சீனர்களுக்கு விசா வழங்கியதாக, கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புது தில்லி: பணம் பெற்றுக் கொண்டு சீனர்களுக்கு விசா வழங்கியதாக, கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதன் அடிப்படையில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை வீடு உள்பட மும்பை, ஒடிசா, கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களல் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப. சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
இதையும் படிக்க.. சிபிஐ சோதனை சுவாரஸ்யமானது: சொல்வது யார்?
Advertisement
Advertisement
பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 260 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சத்தை முறைகேடாக கார்த்தி சிதம்பரம் பெற்றிருந்ததாக அடையாளம் தெரிவிக்க விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. ‘ஆறாவது முறையாக சோதனை’: கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம்: கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு
கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.