யாசின் மாலிக் மீதான கடத்தல் வழக்கு: மெகபூபா முப்தியின் சகோதரிக்கு சிபிஐ சம்மன்
1989 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் சகோதரி ருபையா சயீத் க்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
1989 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட காஷ்மீரின் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகளான ருபையா சயீத்க்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சதித் திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருத்தல், குற்ற சதி, தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாசின் மாலிக் மீதான பழைய வழக்குகளையும் விசாரிக்க சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, 1989 ஆம் ஆண்டு யாசின் மாலிக்கால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகளும் மெகபூபா முப்தியின் சகோதரியுமான ருபையா சயீத்க்கு கடத்தல் வழக்கு தொடர்பாக முதல் முறையாக நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடத்ததலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று 5 பேரை விடுதலை செய்த பின்பே ருபையா சயீத் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.