FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராஜஸ்தானில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 90.4% அதிகரிப்பு!

ராஜஸ்தானில் கடந்தாண்டை ஒப்பிடும்போது உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90.4 சதவீதம் அதிகரித்துள்ளது

1 பிப்ரவரி 2024, 4:22 pm IST
பகிர்:


ராஜஸ்தானில் கடந்தாண்டை ஒப்பிடும்போது உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90.4 சதவீதம் அதிகரித்துள்ளது

முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற மறு ஆய்வுக்கூட்டத்தில், 

கரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

கடந்தாண்டை விட இந்தாண்டு மாநிலத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர இந்தாண்டு செப்டம்பர் வரை 1.64 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ராஜஸ்தானுக்கு வருகை தந்துள்ளனர். 

மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவின் முக்கியத்துவம் பற்றி பேசிய கெலாட், இத்துறை பெரியளவில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. அதே நேரத்தில் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மாநிலத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது என்றார். 

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலாசாரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ராஜஸ்தான் நாட்டுப்புறக் கலை விழாவைத் தனது அரசு விரைவில் ஏற்பாடு செய்யும் என்றார். 

ஜெய்ப்பூர் டவுன் ஹால் அருங்காட்சியகமாக மேம்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். இதற்காக, மாநில அரசு ரூ.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments