முகப்பு
செய்திகள்

நிவின் பாலியின் 50-வது படத்தை இயக்கும் அல்ஃபோன்ஸ் புத்திரன்!

நிவின் பாலியின் 50-வது படம் குறித்து...

Updated On : 21 ஜூன் 2026, 11:07 am IST
நிவின் பாலி, அல்ஃபோன்ஸ் புத்திரன்
பகிர்:

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

நேரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' மிகப்பெரிய ஹிட் அடித்து அவரை தென்னிந்தியளவில் பிரபலப்படுத்தியது. இப்படம் மூலமே நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி ஆகியோருக்கு பெரிய வாய்ப்புகளும் அமைந்தன.

தொடர்ந்து, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Advertisement

Advertisement

இயக்குநர் பணியில் கவனம் செலுத்தினாலும் தற்போது அல்போன்ஸ் புத்திரன் நடிகராகவும் நடித்து வருகிறார். இறுதியாக, நிவினுடன் சர்வம் மாயா, வாழ 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் பெயர் வருகிற ஜூன் 27 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இது, நிவின் பாலியின் 50-வது படம் என்பதாலும் பிரேமம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாலும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

It has been confirmed that actor Nivin Pauly will star in a film directed by Alphonse Puthren.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments