FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நிவின் பாலி - அல்போன்ஸ் புத்திரன் மீண்டும் கூட்டணி!

பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களின் 'விஜயம்' என்ற புதிய படத்துக்காக மீண்டும் கைகோத்துள்ளனர்.

Updated On : 12 ஜூலை 2026, 4:07 am IST
பகிர்:

பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களின் 'விஜயம்' என்ற புதிய படத்துக்காக மீண்டும் கைகோத்துள்ளனர். 'நேரம்', 'பிரேமம்' ஆகிய படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணி தங்களின் அடுத்த வெற்றிப் படைப்புக்காக மீண்டும் இணைந்துள்ளது. நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமையும் 50-ஆவது திரைப்படமாக 'விஜயம்' உருவாகிறது.

எர்ணாகுளத்தில் உள்ள பத்மா திரையரங்கில் ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இதன் தலைப்பு, அறிமுக விடியோ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

ரேசிங்-ஐ பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்துக்கு அல்போன்ஸ் புத்திரன் கதை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்கிறார். 'துரந்தர்', 'துரந்தர் 2' , ஆர்யன் கான் இயக்கிய 'பார்ட்ஸ் ஆஃப் பாலிவுட்' ஆகிய படைப்புகளுக்கு இசையமைத்த கேரளத்தைச் சேர்ந்த ஸ்டீவ் கோட்டூர் பின்னணி இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

நெட்டிசன்களின் பேராதரவைப் பெற்று வரும் இந்தத் தலைப்பு அறிவிப்பு விடியோ, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனை கிண்டல் செய்யும் நகைச்சுவையான காட்சியுடன் தொடங்கி, பின்னர் அல்போன்ஸ், நிவின் திரைப்பயணத்தை சுவாரசியமாக விவரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments