இந்தியா

அதானி குழும விவகாரம்: சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN

அதானி குழுமத்தைக் கண்டித்து தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. 

அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் பற்றிய ஹிண்டென்பா்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்றக் குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்,  எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. மற்றும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய நிா்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் மற்றும் முதலீட்டாளா்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. 

சென்னையிலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. சென்னை எல்ஐசி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்திய பாஜக அரசையும் அதானி குழுமத்தையும் கண்டித்து கோஷம் எழுப்பி வருகின்றனர். 

அதானி நிறுவன முறைகேடுகளையும், அதற்கு மத்திய பாஜக அரசு உதவியதைக் கண்டிக்கும் வகையில் தமிழக மாவட்டத் தலைநகரங்களில் பிப். 6-ல் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டப் பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT