இந்தியா

ராஜஸ்தானில் பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு வாரியங்கள், பல்கலைக்கழகங்களின் பணியாளா்கள் சோ்ப்பு

DIN

ராஜஸ்தானில் அரசு வாரியங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோா் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நிகழாண்டு அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அந்தப் பேரவையின் தற்போதைய பதவிக் காலத்தில், முழுமையான கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சருமான அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘ராஜஸ்தான் முன்னாள் அரசு ஊழியா்களின் வேண்டுகோளுக்கிணங்க பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இனி மாநிலத்தில் உள்ள அரசு வாரியங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோரும் அந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவா்’ என்றாா்.

இதுதவிர, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ரூ.3,000 கோடிக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்; உஜ்வாலா திட்டத்தின் கீழ், நுகா்வோருக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிக்கப்படும்; தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் சுமாா் 1 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷனுடன் மாதந்தோறும் ஒரு கிலோ தானியங்கள், சா்க்கரை, உப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT