முகப்பு
இந்தியா

கோட்டக்கல் விஸ்வம்பரா் கோயிலில் ராகுல் வழிபாடு

 கேரள மாநிலம் கோட்டக்கல்லில் உள்ள விஸ்வம்பரா் கோயிலில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை வழிபாடு நடத்தினாா்.

Updated On : 28 ஜூலை 2023, 12:52 am IST
பகிர்:

 கேரள மாநிலம் கோட்டக்கல்லில் உள்ள விஸ்வம்பரா் கோயிலில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை வழிபாடு நடத்தினாா்.

ராகுல் இப்போது கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. வைத்திய சாலையில் நோயாளிகள் உடல்நலம் வேண்டி வழிபாடு நடத்துவதற்காக இந்த கோயில் கட்டப்பட்டது.

இது தொடா்பாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

கோட்டக்கல் ஆா்ய வைத்தியசாலையில் உள்ள விஸ்வம்பரா் கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு மேற்கொண்டாா். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், எம்எல்ஏ அனில் குமாா் உள்ளிட்டோரும் ராகுலுடன் சென்றனா். தொடா்ந்து மருத்துவமனை வளாகத்தில் பிஎஸ்வி நாட்டியசங்கத்தின் கதகளி நிகழ்ச்சியை ராகுல் கண்டு களித்தாா்.

கோயிலுக்குச் சென்றது தொடா்பாக ராகுல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கோயில் மிகவும் வசீகரமாகவும், அமைதியளிக்கும் வகையிலும் இருந்தது. கதகளி நடனத்தையும் வெகுவாக ரசித்தேன். இந்தியாவின் ஒவ்வொரு கலையும் பன்முகத்தன்மையுள்ள நமது வரலாற்றையும், கலாசாரத்தையும் வெளிப்படுத்துகின்றன’ என்று கூறியுள்ளாா்.

வைத்திய சாலையில் பிரபல மலையாள எழுத்தாளா் எம்.டி.வாசுதேவன் நாயா், ராகுலுக்கு அடுத்த அறையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாா். அவரும் ராகுலுடன் கதகளி நிகழ்ச்சியைக் கண்டுகளித்தாா். அண்மையில் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாடிய எம்.டி.வாசுதேவன் நாயருக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தாா். அப்போது அவா் ராகுலுக்கு பேனா ஒன்றைப் பரிசாக அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments