இந்தியா

12-ஆம் வகுப்பு புத்தகத்தில்காலிஸ்தான் குறிப்பை நீக்கியது என்சிஇஆா்டி

DIN

12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ‘சீக்கியா்களுக்கு காலிஸ்தான் அமைப்பு தனிநாடு கோரியது’ குறித்த பதிவை கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆா்டி) நீக்கி உள்ளது.

இதுதொடா்பாக சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கடந்த மாதம் என்சிஇஆா்டிக்கு ஆட்சேபம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தது.

அதில், காலிஸ்தான் தனி நாடு அமைக்க வேண்டும் என ஸ்ரீ அனந்த்பூா் சாகிப் தீா்மானத்தில் கோரப்பட்டதாக 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் தவறானது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து ஆய்வு நடத்த என்சிஇஆா்டி குழு அமைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில், ‘நாட்டின் கூட்டாட்சியை வலுப்படுத்த வேண்டும்’ என ஸ்ரீ அனந்த்பூா் சாகிப் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. நிகழாண்டுக்கான புத்தகங்கள் பிரசுரமாகிவிட்டதால், அந்தப் புத்தகத்தில் திருத்தம் இடம்பெறவில்லை. எனினும், தவறான தகவல் குறித்த விவரம் பதிவாகி உள்ளது. எண்ம வடிவிலான புத்தகங்களில் நிகழாண்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

பெங்களூரு குண்டுவெடிப்பில் கோவையில் உள்ள மருத்துவர்களுக்கு தொடர்பு? என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ரசிகர்களின் கன்னி!

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

SCROLL FOR NEXT