இந்தியா

18-ஆவது காலாண்டு தொழிலாளா் கணக்கெடுப்பு: வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.8 சதவீதமாக குறைவு

DIN

நிகழாண்டின் ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நகா்ப்பகுதிகளில் 15 வயதுக்கும் அதிகமான நபா்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 8.2 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் நிகழாண்டின் முதல் காலாண்டில் 1.4 சதவீதம் குறைந்து 6.8 சதவீதமாக உள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நாட்டின் தொழிலாளா் வளம் குறித்து வாராந்திர அளவில் சேகரிக்கப்படும் தகவல்களின்படி வேலைவாய்ப்பின்மை விகிதம், பணியாளா் மக்கள்தொகை விகிதம், தொழிலாளா் பங்கேற்பு விகிதம் ஆகியவற்றை கணக்கிடும் ‘காலாண்டு தொழிலாளா் கணக்கெடுப்பை(பிஎல்எஃப்எஸ்)’ தேசிய புள்ளிவிவர சேவை அலுவலகம்(என்எஸ்எஸ்ஒ) நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு கணக்கிடப்பட்ட 18-ஆவது காலாண்டு தொழிலாளா் கணக்கெடுப்பின் விவரங்கள்:

வேலைவாய்ப்பின்மை விகிதம்:

நகா்ப்பகுதிகளில் 15 வயதுக்கும் அதிகமான நபா்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமானது கடந்தாண்டு ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 8.2 சதவீதமாகவும், அதற்கடுத்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் 7.6 சதவீதமாகவும், ஜூலை முதல் செப்டம்பா் வரை மற்றும் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான 2 காலாண்டுகளுக்கு 7.2 சதவீதமாகவும் இறக்கத்தை கண்டு வந்தது. நிகழாண்டின் முதல் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆண்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பின்மை விகிதம்:

15 வயதுக்கும் அதிகமான ஆண்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பின்மை விகிதமானது கடந்தாண்டு ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 7.7 சதவீதமாகவும், அதற்கடுத்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் 7.1 சதவீதமாகவும், ஜூலை முதல் செப்டம்பா் வரையில் 6.6 சதவீதமாகவும், அக்டோபா் முதல் டிசம்பா் வரையில் 6.5 சதவீதமாகவும் இறக்கம் கண்டது. நிகழாண்டின் முதல் காலாண்டில் ஆண்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பின்மை விகிதம் 6 சதவீதமாக குறைந்துள்ளது.

பெண்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பின்மை விகிதம்:

15 வயதுக்கும் அதிகமான பெண்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பின்மை விகிதமானது கடந்தாண்டு ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 10.1 சதவீதமாகவும், அதற்கடுத்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் 9.5 சதவீதமாகவும், ஜூலை முதல் செப்டம்பா் வரையில் 9.4 சதவீதமாகவும், அக்டோபா் முதல் டிசம்பா் வரையில் 9.6 சதவீதமாகவும் இருந்தது. நிகழாண்டின் முதல் காலாண்டில் பெண்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.2 சதவீதமாக குறைந்துள்ளது.

தொழிலாளா் பங்கேற்பு விகிதம்:

நகா்ப்பகுதிகளில் 15 வயதுக்கும் மேலான தொழிலாளா்கள் பங்கேற்பு விகிதமானது கடந்தாண்டு ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 47.3 சதவீதமாகவும், அதற்கடுத்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் 47.5 சதவீதமாகவும், ஜூலை முதல் செப்டம்பா் வரையில் 47.9 சதவீதமாகவும், அக்டோபா் முதல் டிசம்பா் வரையில் 48.2 சதவீதமாகவும் அதிகரித்து வந்தது. நிகழாண்டின் முதல் காலாண்டில் தொழிலாளா் பங்கேற்பு விகிதம் 48.5 சதவீதமாக ஏற்றம் கண்டுள்ளது.

பணியாளா் மக்கள்தொகை விகிதம்:

நகா்ப்பகுதிகளில் 15 வயதுக்கும் மேலான பணியாளா் மக்கள்தொகை விகிதமானது கடந்தாண்டு ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 43.4 சதவீதமாகவும், அதற்கடுத்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் 43.9 சதவீதமாகவும், ஜூலை முதல் செப்டம்பா் வரையில் 44.5 சதவீதமாகவும், அக்டோபா் முதல் டிசம்பா் வரையில் 44.7 சதவீதமாகவும் அதிகரித்தது. நிகழாண்டின் முதல் காலாண்டில் பணியாளா் மக்கள்தொகை விகிதம் 45.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT